ArasIyaLalaSal.com

Revision as of 11:17, 3 October 2013 by AboutUsBot (talk | contribs) (Meta-description fetched by J5 bot.)



(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

          அநீதியை அழிக்க, அதன் முகத்திரையை கிழிக்க, குறிப்பிட்ட சில வழிகள் உண்டு. அதில், முதலிடம் பெறுவது ‘பேனா’ எனும் எழுதுகோல். அதனால் தான் அது கம்பீரமாக, நேர்மையாக நெஞ்சை நிமிர்த்தி, ஜனநாயகத்தைத் தாங்கும் நான்காவது துணையாக ‘பத்திரிகை’ ஆகிறது. மன்னர்களின் காலம் முதல், இன்றைய மக்களாட்சி வரையில், ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னனாக இருந்தாலும் சரி, மக்களாட்சி செய்பவராக இருந்தாலும் சரி, உலகம் முழுவதும் பத்திரிகை என்றால், ஒரு பயம் வந்து விடுகிறது. நேர்மையாக ஆள்பவர்களுக்கு, மேலும் நேர்மை தவறாமல் நின்று, ஆட்சி செய்ய உதவியாக, அவர்களுக்கு ‘பப்ளிசிட்டி’ கொடுக்கும் நேர்மை தவறிய, ஆட்சி செய்பவர்களுக்கும் ஊழல்வாதிகளின் உண்மைவாதிகளாக நடிப்பவர்களுக்கு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி ‘பனிஷ்மென்ட்’ கொடுக்க உதவுவது பத்திரிகைகள் தான். இதனால் தான், ஜனநாயகத்தை சாக்கடை ஆக்குபவர்களுக்கும், ஜனநாயகத்தை சாகடிப்பவர்களுக்கும் ‘பத்திரிகை’ என்றால் அதிக பயம் தான். பத்திரிகை என்பது வெறும் கருப்பு மையும், வெள்ளை பேப்பரும் மட்டும் தான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதன் வல்லமை உலகையே புரட்டிப் போட்டு விடும். ‘பானை பிடித்தவன் பாக்கியசாலி’ என்பது போல், பேனா பிடித்தவன் ஒரு நேர்மையான போராளி ஆவான். உண்மையை உலகறியச் செய்ய எப்போதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். பத்திரிகையில் உண்மை புதைந்திருக்க வேண்டும்; ஒரு நாளும் பத்திரிகையால் புதைக்கப்பட்டு விடக் கூடாது. மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட உண்மையை, நேர்மையோடு, எந்த அழுத்தங்களுக்கும் அடிமையாகாமல், வெளிக்கொண்டு வர வேண்டும். இன்றைய வளர்ச்சியடைந்த தொழிற்நுட்ப காலத்தில், செய்திக்கு பஞ்சமே இல்லை. அது சேனலாக இருந்தாலும் சரி, பத்திரிகையாக இருந்தாலும் சரி, அதில், உண்மை -உண்மையாக அலசப்பட்டிருக்கிறதா? என்பது தான் செய்தி. நீதியை, நேர்மையை, உண்மையை, அலச உங்கள் கைகளில் இதோ ‘அரசியல் அலசல்’ என்கிற மாதமிருமுறை பத்திரிகை. இந்தப் பத்திரிகை மூலமாக ஜனநாயகத்தை, கழுகுப்பார்வையோடு அலசி ஆராய்ந்து, உண்மையை உரத்த குரலில் உலகுக்குச் சொல்ல விருக்கிறேன். செய்திகள் மூலம், யாரையும் தாக்குவதும், பரபரபுக்காக பழி சுமத்துவதும் இந்தப் பத்திரிகையின் நோக்கமல்ல. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, உண்மையை உலகுக்கு கொண்டு வருவதே, இந்தப் பத்திரிகையின் நோக்கம். ‘அரசியல் அலசலில்’ அரசியல் மட்டுமல்ல, ஆன்மீகம், சினிமா, ஜோதிடம், தகவல் தொழிற்நுட்பம், அரசின் மக்கள் நல திட்டங்கள், ஆரோக்கியம்... இன்னும் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட செய்திகளும் அலசப்படும்- உங்கள் ஆதரவோடு.                                                                  நன்றி! என்றும் தங்கள் அன்பை நாடும்                                              STAR.TV பாலா என்ற சி.பாலமுருகன்



Retrieved from "http://aboutus.com/index.php?title=ArasIyaLalaSal.com&oldid=23815433"